தமிழ்நாடு

பரமத்திவேலூர் அடுத்த சுடுகாடு அருகே வாலிபர் சடலம் மீட்பு

சுடுகாடு அருகே வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து பரமத்தி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செந்தில்குமரன்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கீரம்பூர் அருகே வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து பரமத்தி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
கீரம்பூர் சுடுகாடு அருகே உள்ள ராசாம்பாளையம் சக்தி கார்டனில் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். 

அவர், கீரம்பூர் மெட்டுச்சாவடி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த சங்கர் (27) என்பது தெரியவந்தது. பரமத்தி வேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பழனிச்சாமி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 9 கோடிக்கு கேகேஆர் அணியில் இணைந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

2025-ல் இந்திய எல்லைகளில் நடந்த ஊடுருவல், கைது எத்தனை?

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து ரூ. 91.01 ஆக நிறைவு!

ராஜஸ்தானில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 42 லட்சம் பேர் நீக்கம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த விக்னேஷ் புத்தூர்!

SCROLL FOR NEXT