தமிழ்நாடு

கட்டுப்பாட்டை இழந்து வீட்டில் புகுந்த கார்: தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி பலி

தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த வீட்டினுள் புகுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே பலியானார்.

செந்தில்குமரன்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பரமத்தி கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த வீட்டினுள் புகுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே செவ்வாய்க்கிழமை பலியானார்.

கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி தொலைதொடர்பு அலுவலகம் எதிரே ஏராளாமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி கார் சென்றுகொண்டிருந்த போது, அப்பகுதியைச் சேர்ந்தவர் தனது இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றள்ளார். 

இந்த நிலையில், அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் காரை இடது பக்கமாக திருப்ப முயன்றுள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த குடிசை வீட்டிற்குள் புகுந்தது. 

அதில் தூங்கிக்கொண்டிருந்த கௌசல்யா (65) மீது கார் மோதியதில், அவர் நிகழ்விடத்திலேயே பலியானார். விபத்து குறித்து பரமத்தி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

காரில் வந்த மூன்று பேரும் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 9 கோடிக்கு கேகேஆர் அணியில் இணைந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

2025-ல் இந்திய எல்லைகளில் நடந்த ஊடுருவல், கைது எத்தனை?

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து ரூ. 91.01 ஆக நிறைவு!

ராஜஸ்தானில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 42 லட்சம் பேர் நீக்கம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த விக்னேஷ் புத்தூர்!

SCROLL FOR NEXT