தமிழ்நாடு

திருவாரூர் அருகே ஊர் கூடி ஒரே இடத்தில் பொங்கலிட்டு கிராம மக்கள் மகிழ்ச்சி!

DIN

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

விவசாயி தான் பயிரிட நெல்மணிகளை எடுத்து அந்த அரிசியை பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு வழிபாடு நடத்துவது வழக்கம். இதன்மூலமாக விவசாயமும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பொங்கும் என்பது ஐதீகம்.

திருவாரூர் அருகே சேர்ந்தனங்குடி கிராமத்தில், ஊர் கூடி ஒரே இடத்தில் பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருவாரூர் அருகே உள்ளது சேர்ந்தனங்குடி கிராமம். இந்த கிராமத்தில் பொங்கல் பண்டிகை அனைத்து தரப்பு மக்களும் இணைந்து, அங்குள்ள படைவெட்டி மாரியம்மன் கோவில் முன்பு புதன்கிழமை காலை பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் வைத்து, மாவிலை தோரணம் செங்கரும்பு வாழைமரம் என கோவிலை சுற்றி கட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை  செய்து வழிபாடு நடத்தினர்.

வீடுகள் தோறும் பொங்கல் இட்டாலும் ஊர் ஒற்றுமையையும் நன்மையை வலியுறுத்தியும் இந்த பொங்கல் பண்டிகை சேர்ந்தனங்குடி கிராம மக்கள் ஒருங்கிணைந்து நடத்தியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும், வாழ்த்துகளையும் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT