தமிழ்நாடு

மக்கள் விரோதக் கட்சி என்பதை தி மு க ஏற்றுக் கொள்கிறதா? பாஜக கேள்வி

DIN

சென்னை: மக்கள் விரோதக் கட்சி என்பதை தி மு க  ஏற்றுக் கொள்கிறதா? என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

'200 ஜன்பத்கள்' அமைக்கும் திட்டத்தை பாஜக அரசு செயல்படுத்த திட்டமிடுகிறது என்றும் அதை தடுத்தே தீருவோம் என்றும், அதை கண்டிக்கிறோம் என்றும் நவம்பர் 10, 2019 அன்று தி மு க பொதுக்குழுவில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. நான் பலமுறை கேட்டு விட்டேன். ஜன்பத்கள் என்றால் என்ன? அதை அமைக்க, செயல்படுத்த பாஜக அரசு எப்படி திட்டமிட்டது? என்பதையெல்லாம் இன்று வரை கூறவில்லை. ஊடகங்கள் அன்றைய தினம் இதை விவாதத்திற்கு எடுத்து கொண்டன. ஜன்பத்கள் என்றால் என்ன என்று தி மு கவினருக்கும் தெரியவில்லை; விவாதங்களை நடத்திய ஊடகங்களுக்கும் புரியவில்லை. அதன் பிறகு அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்கள்.

தில்லியில் உள்ள பெரிய சாலை ஜன்பத். ஜன்பத் என்றால் 'மக்கள் பாதை' என்று பொருள். மக்கள் பாதையில் பாஜக அரசு செல்வதை கண்டிக்கிறதா தி மு க? மக்கள் பாதையில் திட்டம் அமைத்தால் எதிர்க்குமா தி மு க ? தி மு க மக்கள் விரோத கட்சி என்பதை ஏற்று கொள்கிறதா? ஊடகவியலாளர்கள் ஸ்டாலின் அவர்களை பேட்டி காணும்போது இது குறித்து கேள்வி எழுப்புவார்களா? எல்லாம் 'OMG சுனிலுக்கே' வெளிச்சம் என்று சொல்வாரா ஸ்டாலின் அவர்கள்?

யாரோ சொன்னதை திருப்பி சொல்லும் கிளிப்பிள்ளைகள் மக்கள் பாதை குறித்து அறிந்திருக்க மாட்டார்கள். முரசொலி மற்றும் துக்ளக் குறித்து ரஜினி சொன்னது சரிதான் என்பதை நிரூபித்திருக்கிறார் ஸ்டாலின் அவர்கள். ஜன்பத் குறித்த தி மு கவின் பொது குழு தீர்மானம் என்ன சொல்கிறது என்பதை தி மு கவை சார்ந்த யாரேனும் ஒருவர் விளக்கட்டும். அதுவரை ரஜினி சொன்னது சரியே என்ற நிலை தொடரும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT