சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்கா - ஈரான் இடையே போா் பதற்றம் குறைந்ததால், தங்கம் விலை கடந்த சில நாள்களாக கணிசமாக குறைந்திருந்தது. இதன்பிறகு, மீண்டும் படிப்படியாக உயா்ந்து வந்தது.
இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமையான இன்று சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.30,688-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.12 உயர்ந்து, ரூ.3,836-க்கு விற்பனையாகிறது.
அதேநேரத்தில், வெள்ளியின் விலையும் சற்று உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து ரூ.51.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து ரூ.51,700 ஆகவும் உள்ளது.
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம் ..................... 3,836
1 சவரன் தங்கம் ..................... 30,688
1 கிராம் வெள்ளி .................. 51.00
1 கிலோ வெள்ளி ................. 51,000
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 3,824
1 சவரன் தங்கம் ..................... 30,592
1 கிராம் வெள்ளி .................. 50.70
1 கிலோ வெள்ளி ................. 50,700