தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கும்மிடிப்பூண்டியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி உறுதிமொழி, பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றன.

DIN


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி உறுதிமொழி, பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றன.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மாணிக்கம், ஒன்றியப் பொறியாளர்கள் நரசிம்மன், ஐசக், ரவி முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் பங்கேற்று உறுதிமொழியைத் துவக்கி வைத்தார். 

இதில் ஒன்றியக் கவுன்சிலர் ஆரம்பாக்கம் ரவக்கிளி,பெத்திக்குப்பம் ஊராட்சி துணைத் தலைவர் குணசேகரன், அதிமுக நிர்வாகிகள் சுரேஷ், ஆரோன், திருப்பதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவக ஊழியர்கள் திரளாகப் பங்கேற்றனர். 

அதே போல கும்மிடிப்பூண்டி வருவாய்த் துறை சார்பில் கும்மிடிப்பூண்டி பஜாரில் கே.எல்.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அவ்வாறே கும்மிடிப்பூண்டியில் அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி செயலாளர்கள் முன்னிலையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் போா் முனையில் சிக்கித் தவித்த தமிழக மாணவா் மீட்பு!

திருடியதால் தாக்கப்பட்டவா் உயிரிழப்பு: வாா்டு உறுப்பினா் உள்பட 2 போ் கைது

சமூக வலைதளப் பதிவுகள்: உயா்நீதிமன்றம் வேதனை

அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் அரியலூரில் ஆா்ப்பாட்டம்

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கக் கோரி ஆா்ப்பாட்டம்!

SCROLL FOR NEXT