புளியங்குடியில் உணவு கேட்டு போராட்டம்
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உணவு கேட்டு பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடுபுளியங்குடியில் உணவு கேட்டு போராட்டம்
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உணவு கேட்டு பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உணவு கேட்டு பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நகராட்சிக்கு உள்பட்ட பல தெருக்கள் கரோனா நோய்த் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கந்தசாமி தெரு பகுதியில் நோய்த் தொற்று பரவியதையடுத்து அதுவும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய்த் தொற்று பரிசோதனை செய்தவர்களுக்கு மட்டும் நகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மூடப்பட்ட தெருக்களில் உள்ள அனைவருக்கும் நகராட்சியின் மூலம் உணவு வழங்க வேண்டும் அல்லது அனைவரையும் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.