முகப்பு
தமிழ்நாடு

கரோனா தொற்றுக்கு ஆண்டிபட்டியில் பெண் பலி

ஆண்டிபட்டியில் கரோனா வைரஸ் தொற்று பாதித்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
கரோனாவுக்கு ஆண்டிபட்டியில் பெண் பலி
பகிர்:

ஆண்டிபட்டியில் கரோனா வைரஸ் தொற்று பாதித்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சீதாராம்தாஸ் நகர்ப் பகுதியைச் சேர்ந்த 52 வயது பெண் நீரழிவு நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சையின்போது அவருக்கு கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. 

இதனையடுத்து அப்பெண்ணை கடந்த ஜூன் 27ஆம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தேனி மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. 

முழு கட்டுரையைப் படிக்க →