முகப்பு
தமிழ்நாடு

கூடலூர் சித்த மருத்துவர்களுக்கு காவலர் பாராட்டு

தேனி மாவட்டம் கூடலூரில் கரோனா காலத்தில் பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு உத்தமபாளையம் டி.எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
கூடலூர் சித்த மருத்துவர்களுக்கு காவலர் பாராட்டு 
பகிர்:

தேனி மாவட்டம் கூடலூரில் கரோனா காலத்தில் பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு உத்தமபாளையம் டி.எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார். 

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த பரம்பரை சித்த மருத்துவர்கள் எஸ்.நந்தகோபால், மா.ராமலிங்கம். இவர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினருக்கு, கூடலூர் அருந்தமிழ் சன்மார்க்க வைத்திய அறக்கட்டளை மூலம் பாரம்பரிய மூலிகைக் கபசுரக்குடிநீர் வழங்கினர். 

அரசு அறிவித்த பேரிடர் காலத்தில் இவர்கள் கபசுர குடிநீர்  வழங்கிய சேவையை உத்தமபாளையம் காவல் துணை  கண்காணிப்பாளர் ந. சின்னக்கண்ணு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார். ஊரடங்கு முடியும் காலம் வரை பொதுமக்களுக்கு  இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.