முகப்பு
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு விவகாரம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி பிரிவு காவல்துறையினர் விசாரணையை இன்று தொடங்கினர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு விவகாரம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
பகிர்:

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி பிரிவு காவல்துறையினர் விசாரணையை இன்று தொடங்கினர். 

இதுகுறித்து சிபிசிஐடி பிரிவு ஐஜி சங்கர் கூறுகையில்,  தந்தை - மகன் இறப்பு குறித்து விசாரணை நடத்த பத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்கள் பல்வேறு பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது எனவும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →