முகப்பு
தமிழ்நாடு

மேட்டுப்பாளைத்தில் பெண் யானை சுட்டுக்கொலை: பிரேதப் பரிசோதனையில் தகவல்

மேட்டுப்பாளையம் அருகே பெண் காட்டு யானையை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
சுட்டுக் கொல்லப்பட்ட பெண் யானை
பகிர்:

மேட்டுப்பாளையம் அருகே வனத்திலிருந்து உணவு தேடி வந்த பெண் காட்டு யானையை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி கிராமத்தை ஒட்டி வனபத்திரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நீரேற்று நிலையம் உள்ளது. இப்பகுதியில் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி இவரது சகோதரர் கிருஷ்ணசாமி ஆகியோரின் விளைநிலம் உள்ளது. இந்த விளை நிலத்தில் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் பயிரிடப்பட்டு இருந்தது. 

இப்பகுதி மேட்டுப்பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட கண்டியூர் காப்புகாடு வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இங்கு காட்டு யானைகள் கூட்டம் தினசரி இரவு நேரத்தில் அதிக அளவிலிருந்து வந்துள்ளது. இதனால் இப்பகுதியில் காட்டு யானை மட்டுமல்லாமல் சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வருவதை தடுக்க நில உரிமையாளர்கள் சார்பில் சோலார் மூலம் மின் வேலிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அவ்வப்போது இப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் நீரேற்று நிலைய பகுதியில் இருந்து அதிக மின் திறன் கொண்ட லைன் மூலம் மின் வேலிகளுக்கு மின்னிணைப்பு கொடுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 6 மணியளவில் இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் பெண் யானை ஒன்று காதில் ரத்தம் வடிந்த நிலையில் உயிரிழந்திருப்பதாக மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. 

இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையின் உடலை நேரில் பார்வையிட்டனர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் வந்து யானையின் உடலைப் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டதில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் காதுப் பகுதியில் சுட்டது தெரியவந்துள்ளது. மேலும் துப்பாக்கியின் தோட்டாக்கள் யானையின் மூளை வரை சென்று உள்ளதால் அதே இடத்தில் யானை துடிதுடித்து இறந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து இந்த யானையின் குட்டி தன் தாயை விட்டுப் பிரிந்து செல்ல முடியாமல் இப்பகுதியில் சுற்றிச் சுற்றி உலா வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் விளை நிலத்திற்குச் சொந்தமான ராமசாமி, கிருஷ்ணசாமி ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →