முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 824 ஆக உயர்வு: 13 பேர் பலி

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸுக்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில் புதிதாக 24 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜூலை, 2020 at 12:52 PM
புதுச்சேரியில் கரோனா சோதனை
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:23 PM

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸுக்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில் புதிதாக 24 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, 

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 93 வயது பெண் ஒருவர் நேற்று மாலை அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனாவுக்கு உயிரிழந்தார். அவர் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். 

Advertisement

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 23 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும் தொற்று பதிவாகியிருந்தது. மாகே மற்றும் யானம் பகுதிகளில் புதிதாக யாருக்கும் தொற்று பதிவாகவில்லை.

அதில், 19 பேர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 4 பேர் ஜிப்மரிலும், ஒருவர் காரைக்கால் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 53 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர்.

தற்போது, ​​அரசு மருத்துவக் கல்லூரியில் 241 பேர், ஜிப்மரில் 121, கரோனா பராமரிப்பு மையங்களில் 22, காரைக்கால் அரசு மருத்துவமனையில் 29, மாகே அரசு மருத்துவமனையில் எட்டு, யானம் அரசு மருத்துவமனையில் 2 மற்றும் புதுச்சேரிக்கு வெளியே 4 பேர் சிகிச்சையில் என மொத்தம் 427 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 824 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 384 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். தொற்றுக்கு 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.