தமிழ்நாடு

தாராபுரத்தில் தனியார் வங்கியால் பாதிக்கப்பட்ட விவசாயி தற்கொலை

DIN

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் வங்கியால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர்  விஷ மாத்திரையைத் சாப்பிட்டு  சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மானூர்பாளையம் கிராமம் குழந்தைபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜாமணி (55). இவர் கடந்த 2012ஆம் ஆண்டு தாராபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் விவசாயக் கடன் பெற்றிருந்தார். 

இந்தநிலையில் வறட்சி மற்றும் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவரால் சரிவர கடனை திருப்பிச் செலுத்த இயலவில்லை. இதனிடையே  கரோனா பொதுமுடக்கம் காரணமாகவும் கடந்த 4 மாதங்களாக கடன் தொகையை செலுத்ததால் வங்கி அதிகாரிகள் வீட்டுக்கே சென்று மிரட்டியுள்ளனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் ராஜாமணி தென்னை மரத்துத்து பயன்படுத்தும்  செல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு சனிக்கிழமை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். பின்னர் மருத்துவர்களின் அறிவுரைப்படி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜாமணி உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT