தமிழ்நாடு

ஜெ. அன்பழகன் உருவப் படத்தை திறந்துவைத்தார் ஸ்டாலின்

DIN

திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான மறைந்த ஜெ.அன்பழகன் திருவுருவப் படத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

திமுக எம்எல்ஏவாக இருந்த ஜெ. அன்பழகன் கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இந்த நிலையில், அவரது திருவுருவப் படத்தை தனது இல்லத்தில் இன்று திறந்து வைத்த மு.க. ஸ்டாலின், ஜெ. அன்பழகன் எதையும் சரி என்றால் பாராட்டுவார், தவறென்றால் விமரிசிப்பார். கட்சி நிகழ்ச்சிகள், போராட்டங்கள் என எதையும் பிரம்மாண்டமாக நடத்திக் காட்டியவர்.

திமுக தொண்டர்களின் உணர்வை வார்த்தைகளில் பிரதிபலித்தவர் ஜெ. அன்பழகன். அன்புவின் சிரித்த முகத்தை மறக்க முடியாது; அவர் சிந்திய வியர்வையும், இரத்தமும் வீண்போகாது. வாழ்க என் சகோதரன் அன்புவின் புகழ் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

SCROLL FOR NEXT