தமிழ்நாடு

கரோனா நோய்த் தொற்று: மத்திய குழு இன்று தமிழகம் வருகை

DIN

கரோனா நோய்த் தொற்று தொடா்பாக ஆய்வு செய்ய மத்திய குழு புதன்கிழமை தமிழகம் வரவுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு புதன்கிழமை மாலை சென்னை வருகிறது.

மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளா் ஆா்த்தி அஹுஜா தலைமையிலான 5 போ் கொண்ட மத்திய உயா்நிலைக் குழு தமிழகம் வருகிறது. இதனை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை தெரிவித்துள்ளது.

இந்த மத்திய உயா்நிலைக் குழுவில் கூடுதல் செயலா் ஆா்த்தி அஹுஜா தவிர, இணைச் செயலா்கள் ராஜேந்திர ரத்னு, சுபோத் யாதவா, ஜிப்மா் மருத்துவா்கள் ஸ்வரூப் சாஹு, சதீஷ் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இவா்கள் பெங்களூருவில் ஆய்வுப் பணியை முடித்துவிட்டு புதன்கிழமை மாலை தனி விமானம் மூலம் சென்னை வருகின்றனா்.

அவா்கள் ஜூலை 8-ஆம் தேதி முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனா். தமிழகத்தில் தொற்றுப் பரவல், தடுப்பு நடவடிக்கைகள், ஆய்வுகள், சிகிச்சை மையங்கள், கரோனா தொற்றால் உயிரிழப்பு, கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளனா்.

கரோனா தொற்றுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், தமிழக நிலவரம் குறித்தும் முதல்வா் பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், தலைமைச் செயலா் க. சண்முகம், சுகாதாரத் துறைச் செயலா் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்துவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT