முகப்பு
தமிழ்நாடு

என்எல்சி கொதிகலன் வெடிவிபத்து: ரூ.5 கோடி அபராதம் விதித்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

நெய்வேலியில் உள்ள என்எல்சி கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகினர். இந்த விபத்துக்கு என்எல்சி நிர்வாகத்துக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:55 PM
என்எல்சி கொதிகலன் வெடித்து விபத்து
பகிர்:


நெய்வேலியில் உள்ள என்எல்சி கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகினர். இந்த விபத்துக்கு என்எல்சி நிர்வாகத்துக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கடந்த 1-ஆம் தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் 6 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் 17 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 16 போ் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களில் கடந்த 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை தலைமைப் பொறியாளா் ஒருவா், இளநிலைப் பொறியாளா்கள் இருவா், போா்மேன் ஒருவா், 2 ஒப்பந்தத் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியைச் சோ்ந்த ஒப்பந்தத் தொழிலாளி ஆனந்த பத்மநாபன் (44) செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 13-ஆக உயா்ந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்ற தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்த விபத்து தொடர்பாக என்எல்சி நிர்வாகத்துக்கு இடைக்கால அபராதத் தொகையாக ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →