முகப்பு
தமிழ்நாடு

வியாபாரிகளுக்கு கரோனா: புதுச்சேரியில் பெரிய மார்க்கெட் மூடல்

புதுச்சேரியில் பெரிய மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அடுத்த 2 நாட்களுக்கு மூடப்படுவதாக புதுச்சேரி நகராட்சி அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:

புதுச்சேரியில் பெரிய மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அடுத்த 2 நாட்களுக்கு மூடப்படுவதாக புதுச்சேரி நகராட்சி அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் நகரின் மையப் பகுதியில் நேரு வீதி -காந்தி வீதி சந்திப்பில்  குபேர் அங்காடி என்கிற பெரிய மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மளிகை கடைகள், காய்கறி கடைகள், மீன் கடைகள், துணிக் கடைகள் என 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இப்பகுதியில் 6 பேருக்கு இன்று கரோனா  நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து நோய் பரப்பும் பகுதியாக குபேர் அங்காடி விளங்குவதால் அரசு அறிவித்து உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து வியாபாரிகளை உடனடியாக கடைகளை மூட உத்தரவிட்டனர். 

இன்று மூடப்படும் கடைகளில் 48 மணி நேரத்துக்கு பிறகுதான் தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த 48 மணி நேரத்தில் கிருமிநாசினி அனைத்து கடைகளுக்கும் தெளிக்கப்படும், உரிய பாதுகாப்பு பிறகுதான் சனிக்கிழமை கடைகள் திறக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் நகராட்சியில் நடவடிக்கையை வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தாலும் குறுகிய கால அவகாசத்தில் கடைகளை மூடுவது கஷ்டமான விஷயம். இருப்பினும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து கடைகளை மூடுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →