முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

மின் கட்டண உயர்வுக்கு எதிராக வருகிற 21 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக வருகிற 21 ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

தமிழ்நாடு

மின் கட்டண உயர்வுக்கு எதிராக வருகிற 21 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக வருகிற 21 ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக வருகிற 21 ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். 

மின் கட்டண உயர்வு குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நிலையில், வருகிற 21 ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திமுக தொண்டர்கள் தங்கள் வீட்டின் முன்பு கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

முன்னதாக, கரோனா பொதுமுடக்க காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணம் செலுத்த அரசு சார்பில் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்பின்னர் சமீபத்தில் நான்கு மாதத்துக்கான மின் கட்டணம் செலுத்த வலியுறுத்தப்பட்டது. இதில் வழக்கத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →