தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 4,549 பேருக்கு கரோனா; மேலும் 69 பேர் பலி

DIN

தமிழகத்தில் இன்று புதிதாக 4,549 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 4,549 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இன்று தொற்று இருப்பவர்கள் உறுதி செய்யப்பட்டவர்கள் 4,483 பேர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டவர்கள் 66. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,56,369  ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 1,157 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இன்றைய அறிவிப்பில் மேலும் 69 பேர் (அரசு மருத்துவமனை - 44, தனியார் மருத்துவமனை -25) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 2,236 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,07,416 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 46,714 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 45,888 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 17,82,635 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 54, தனியார் ஆய்வகங்கள் 53 என மொத்தம் 107 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT