முகப்பு
தமிழ்நாடு

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
பகிர்:


சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவக் காற்றில் ஏற்பட்டுள்ள திசை வேக மாறுபாட்டின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

நாளை 18-ம் தேதி வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 18 -  22 வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →