தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,807 பேருக்கு கரோனா பாதிப்பு; 88 பேர்பலி

DIN

தமிழகத்தில் இன்று புதிதாக 4,807 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1.65 லட்சத்தைக் கடந்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் விவரங்களை மாநில சுகாதாரத் துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 4,807 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,65,917 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 49,452 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று ஒரே நாளில் 3,049 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் 88 பேர் பலியாகியுள்ளனர். இதில் 64 பேர் அரசு மருத்துவமனையிலும், 24 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இன்று 88 பேர் மரணம் அடைந்ததை அடுத்து ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,403 ஆக உயர்ந்துள்ளது.

இதில், சென்னையில் மட்டும் 1,219 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு 84,598 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று 3,049 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 1,13,856 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 49,452 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 48,195 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 18,79,499 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 56, தனியார் ஆய்வகங்கள் 55 என மொத்தம் 111 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT