முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2,535  கனஅடியாக அதிகரித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
கோப்புப் படம்
பகிர்:


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2,535  கனஅடியாக அதிகரித்துள்ளது. 

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. விநாடிக்கு 803 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 2,535 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர் வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிவிலிருந்து மீண்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் சனிக்கிழமை காலை 70.65 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசன தேவைக்காக விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.26 டி.எம்.சியாக உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →