முகப்பு
தமிழ்நாடு

ஓமலூர்: சாலை விபத்தில் கணவன்-மனைவி தலை நசுங்கி பலி

ஓமலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் -  மனைவி தலை நசுங்கி சம்பவயிடத்தில் பரிதாபமாக பலியாகினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
ஓமலூர்: சாலை விபத்தில் கணவன்-மனைவி தலை நசுங்கி பலி
பகிர்:

ஓமலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் -  மனைவி தலை நசுங்கி சம்பவயிடத்தில் பரிதாபமாக பலியாகினர்.

ஓமலூர் பேரூராட்சி பகுதிக்கு உள்பட்ட இந்தியன் பேங்க் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி இருவர் மீது லாரி மோதியது. இதில், சம்பவயிடத்திலேயே தலை நசுங்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தார்கள். 

சம்பவம் அறிந்த ஓமலூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து சம்பவயிடத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →