தமிழ்நாடு

சாத்தான்குளம் கொலை வழக்கு: மூன்று காவலர்களுக்கு வருகிற 23 ஆம் தேதி வரை சிபிஐ காவல்

DIN

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான மூன்று காவலர்களுக்கு வருகிற 23 ஆம் தேதி வரை சிபிஐ காவல் அளித்து மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் காவல்  ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 போலீஸாரும் கடந்த வாரம் 3 நாள்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை ஜூலை 30 வரை நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. 5 போலீஸாரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்ட 5 போலீஸாரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டிருந்தது. இதில் சிபிஐ விசாரணைக்கு 3 பேர் சம்மதம் தெரிவித்த நிலையில், சாமதுரை, செல்லதுரை, வெயில் முத்து ஆகிய மூன்று காவலர்களுக்கும் 23ம் தேதி வரை சிபிஐ காவல் அளித்து மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT