முகப்பு
தமிழ்நாடு

மருத்துவச் சேர்க்கையில் ஓபிசிக்கு ஒதுக்கீடு: நீதிமன்றத்தில் மருத்துவக் கவுன்சில் பதில்

மருத்துவச் சேர்க்கையில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான  வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
மருத்துவச் சேர்க்கையில் ஓபிசிக்கு ஒதுக்கீடு: நீதிமன்றத்தில் மருத்துவக் கவுன்சில் பதில்
பகிர்:

சென்னை: மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட  மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் தான் அனுமதியளிக்க வேண்டும் என அகில இந்திய மருத்துவக் கவுன்சில் தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வ வாதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புக்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த கோரிக்கை தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக, திக மற்றும் தமிழக சுகாதாரத்துறை  சார்பில்  வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.  இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில்,  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம்.  அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்புக்காக வரும் ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய மருத்துவக் கவுன்சில்  எழுத்து பூர்வ வாதங்களை தாக்கல் செய்துள்ளது. அதில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட  மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் தான் அனுமதியளிக்க வேண்டும். மேலும் மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகள், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொருந்தும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. எனவே உச்ச நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல், மாணவர் சேர்க்கை நடைமுறையில் மாற்றம் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →