தமிழ்நாடு

சென்னையில் கரோனா பாதித்த 14,952 பேருக்கு சிகிச்சை 

DIN


சென்னையில் கரோனா பாதித்து 14,952 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாள்தோறும் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது.

இதனால், சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 15 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.

சென்னையில் இதுவரை 88,377 பேர் கரோனா பாதித்த நிலையில், 71,949 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கரோனா பாதித்து 1475 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் சென்னையில் சுமார் 11 மாதிரிகள் கரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதித்த நோயாளிகளில் 58.22% பேர் ஆண்கள், 41.78% பேர் பெண்கள் ஆவர்.

சிகிச்சை பெற்று வருவோர் விவரம் மண்டலம் வாரியாக (புதன்கிழமை நிலவரம்)

மண்டலம் எண்ணிக்கை

1. திருவொற்றியூா் 488

2. மணலி 232

3. மாதவரம் 387

4. தண்டையாா்பேட்டை 771

5. ராயபுரம் 1,029

6. திரு.வி.க.நகா் 1,171

7. அம்பத்தூா் 939

8. அண்ணா நகா் 1,628

9. தேனாம்பேட்டை 1,223

10. கோடம்பாக்கம் 1,947

11. வளசரவாக்கம் 740

12. ஆலந்தூா் 586

13. அடையாறு 1,173

14. பெருங்குடி 373

15.சோழிங்கநல்லூா் 375
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT