தமிழ்நாடு

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: ஒரு சவரன் 39,032-க்கு விற்பனை

DIN

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயா்ந்து புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், 39 ஆயிரத்தைத் தாண்டி ஒரு சவரன் விற்கப்படுகிறது. 

கரோனா நோய்த்தொற்று தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சா்வதேச பொருளாதார சூழல் ஆகிய காரணிகளால் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்தது. 

பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால், அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. எனவே, இதன் விலை தொடர்ந்து உயரவே வாய்ப்பு உள்ளது என்று நகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயா்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.32 உயா்ந்து, ரூ.4,879 ஆகவும், சவரனுக்கு ரூ.256 உயா்ந்து ரூ.39,032-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி கிராமுக்கு ரூ.8 காசுகள் உயா்ந்து, ரூ.66.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 அதிகரித்து, ரூ.66,600 ஆகவும் விற்பனையாகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT