முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கோடம்பாக்கத்தில் சிகிச்சையில் 2,291 பேர்: மண்டலவாரியாக விவரம்

சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,291 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,291 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. எனினும், சமீபமாக சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்‍கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்‍கை சற்று குறைந்து வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் இதுவரை 93,537 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,989 பேர் உயிரிழந்துள்ளனர். 77,625 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 13,923 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்ந்து, சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

தற்போது ராயபுரம் மண்டலத்தில் 941 பேரும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 605 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,143 பேரும், கோடம்பாக்கத்தில் 2,291 பேரும், அண்ணா நகரில் 1,727 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →