முகப்பு
தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம்: முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். 

Updated On : 26 ஜூலை, 2020 at 10:57 AM
முதல்வர் பழனிசாமி
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:30 PM

ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். 

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகததில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம், இலவசமாக முகக் கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் சமீபத்தில் அறிவித்தார். 

அதன்படி, நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச முகக்கவசம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். 

Advertisement

அதன்படி, வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு முகக்கவசங்கள் என்ற கணக்கில் மறுபயன்பாடு செய்யக்கூடிய 13 கோடியே 48 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.