தமிழ்நாடு

சென்னையில் மட்டும் சிகிச்சையில் 13,744 பேர்: மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

DIN

சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. எனினும், சமீபமாக சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்‍கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்‍கை சற்று குறைந்து வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் இதுவரை 94,695 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,011 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 78,940 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 13,744 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்ந்து, சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

தற்போது ராயபுரம் மண்டலத்தில் 906 பேரும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 605 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,116 பேரும், கோடம்பாக்கத்தில் 2,192 பேரும், அண்ணா நகரில் 1,601 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT