கும்மிடிப்பூண்டியில் மத்திய அரசின் அவசர சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்
விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் மூன்று அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கத்தினர் கும்மிடிப்பூண்டியில் திங்கள்கிழமை கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடுகும்மிடிப்பூண்டியில் மத்திய அரசின் அவசர சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்
விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் மூன்று அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கத்தினர் கும்மிடிப்பூண்டியில் திங்கள்கிழமை கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டியில் மத்திய அரசின் அவசர சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம்
விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் மின்சார திருத்த சட்டம் 2020, அத்தியாவசிய பொருள்கள் அவசர திருத்த சட்டம் 2020, வேளாண் விளை பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் 2020 உள்ளிட்ட மூன்று அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கத்தினர் கும்மிடிப்பூண்டியில் திங்கள்கிழமை கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி பேருந்துநிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜெ.அருள் தலைமை தாங்கினார். சங்கத்தின் ஒன்றிய தலைவர் என்.ராஜேஷ்,செயலாளர் ரகு, கௌரவ தலைவர் செங்கல்வராயன், பொன்னேரி ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளரும் கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலருமான ரவிக்குமார் பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து போராட்டத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் மத்திய அரசின் அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் பங்கேற்றோர் கண்டன முழக்கம் இட்டனர்.
இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 35பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.