கரோனா பாதிப்பால் தனியார் மண்டபத்திற்கு மாற்றப்பட்ட உடுமலை காவல் நிலையம்
உடுமலையில் காவல் நிலைய தலைமை எழுத்தர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்காலிகமாக ஒரு தனியார் மண்டபத்திற்கு காவல் நிலையம் மார்றப்பட்டது.
உடுமலையில் காவல் நிலைய தலைமை எழுத்தர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்காலிகமாக ஒரு தனியார் மண்டபத்திற்கு காவல் நிலையம் மார்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இதுவரை கரோனா தொற்றால் 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் உடுமலை காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை எழுத்தர் ஜீவானந்தம் (43) என்பவருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக காவல்நிலையத்தில் பணியாற்றும் 40க்கும் மேற்பட்ட காவலர்கள் வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி அடிக்கும்பணி நடந்து வருகிறது.
மேலும் காவலர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல் நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.