தமிழ்நாடு

மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் இன்று ஆலோசனை

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொது முடக்கத்தில் கூடுதல் தளா்வுகள் ஆகியன குறித்து மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா்.

முன்னதாக, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் புதன்கிழமை ஆலோசித்தாா். அதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு நிலவரம், பொது முடக்கம் ஆகியன குறித்து விவாதித்தாா்.

ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தங்களது மாவட்டத்திலுள்ள நோய்த் தொற்று நிலவரங்களைத் தெரிவித்தனா். மேலும், நோய்த் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் இப்போதுள்ள பொது முடக்கத்தை நீட்டிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

மருத்துவ நிபுணா் குழு: மாவட்ட ஆட்சியா்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, தமிழக அரசு நியமித்துள்ள மருத்துவா் குழுவுடன் முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசிக்கவுள்ளாா். தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்புகளை தமிழக அரசு ஓரிரு நாளில் வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT