தமிழ்நாடு

முழு கட்டணம் வசூலிக்கும் கல்வி நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

DIN

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, முழு கட்டணம் வசூலிக்கும் கல்வி நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முழு கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகளின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தையும் வசூலிப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது.

இதையடுத்து, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, தனியார் பள்ளிகள் உள்பட கல்வி நிலையங்கள் 40% கட்டணங்களை மட்டுமே வசூலிக்கலாம் என்றும், முழு கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT