தமிழ்நாடு

கரோனா பாதிப்பு அதிகரித்து பின் கட்டுக்குள் வரும்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

DIN


சென்னை: சென்னையில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து பின் கட்டுக்குள் வரும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆணையர் பிரகாஷ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, கரோனா பாதிப்பைக் கண்டறிய வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மக்கள் அடர்த்தி அதிகம் என்பதால் தண்டையார்பேட்டை, ராயபுரத்தில் அதிக பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.


கரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வயதான மற்றும் உடல்நலப் பாதிப்பு அதிகம் உள்ளவர்களை கூடுதல் கவனம் செலுத்தி கண்காணித்து வருகிறோம். 

கரோனா பாதிப்பைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து பிறகு கட்டுக்குள் வரும் என்றும் ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே, நீ கலைகளின் தொகுப்பு... சாக்க்ஷி மாலிக்!

‘கீழ்த்தரமான பேச்சு’: பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை!

கடலோரக் கவிதை!

சென்னை விமான நிலையத்தில் தூக்கி எறியப்படும் தங்கம்? மிரண்டுபோன அதிகாரிகள்

மணீஷ் சிசோடியாவுக்கு மே 31 வரை காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT