தமிழ்நாடு

கோவை, நீலகிரி, தேனி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

DIN


கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென்மேற்குப் பருவ மழை கேரளத்தில் தீவிரமடைந்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய இலோசனது முதல் மிதமான மழையும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்..
பேச்சிப்பாறையில் 9 செ.மீ. மழையும், கரூர் பரமத்தியில் 8 செ.மீ. மழையும், குழித்துறை, துவக்குடியில் தலா 6 செ.மீ. மழையும், திருக்காட்டுப்பள்ளி, கன்னிமார் பகுதியில் தலா 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாகவும், அதனை தொடர்ந்து 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் வலுவடைந்து நாளை பிற்பகல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மகாராஷ்டிரம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு குஜராத் கடற்கரையில் ஹரிஹரேஸ்வர் மற்றும் தாமனுக்கு இடையே அலிபாக் அருகே கரையைக் கடக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT