நளினி, முருகனை உறவினர்களுடன் பேச அனுமதி மறுப்பது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
நளினி, முருகனை உறவினர்களுடன் பேச அனுமதி மறுப்பது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நளினி, முருகனை உறவினர்களுடன் பேச அனுமதி மறுப்பது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி மற்றும் முருகன் இருவரும் காணொலி வசதி மூலம் உறவினா்களிடம் பேச அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது. நளினி, முருகன் தமிழகர்கள்தானே? உறவினர்களிடம் 2 பேரும் பேச தமிழக அரசு அனுமதி மறுப்பது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
7 பேரை விடுவிக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய அரசு ஏன் முரண்பாடு காட்டுகிறது என்றும் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் இவ்வழக்கில் தமிழக அரசு நாளை பதிலளிக்க உத்தவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.