தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,384 பேருக்கு கரோனா தொற்று

DIN


தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,384 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய சமீபத்திய தகவலை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,384 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,373. பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் இன்று உறுதி செய்யப்பட்டோர் 11.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,072 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மேலும் 12 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரேநாளில் 585 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 14,901 பேர் குணமடைந்துள்ளனர். 

இன்றைய தேதியில் 12,132 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 15,991 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 5,20,286 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 74 (அரசு 44 + தனியார் 30) பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT