முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் கடலில் தவறி விழுந்து பலி

தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:45 PM
பகிர்:

தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி லுார்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் மரியஜோசப். இவர் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அந்தமான் கடல் பகுதிக்குச் சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். அதன்படி கடந்த மார்ச் மாதம் மரியஜோசப் உட்பட 5 பேர் விசைப்படகில் மீன்பிடிக்க அந்தமான் பகுதிக்கு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்து முடித்துவிட்டு விசைப்படகில் மரிய ஜோசப் உள்பட 5 பேர் தூங்கியுள்ளனர். இதில் மரிய ஜோசப் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து விட்டார். 

மறுநாள் காலை படகிலிருந்த மற்றவர்கள் எழுந்து பார்க்கும்போது மரிய ஜோசப் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை தேடினர். இதற்கிடையே அந்தமான் கடற்கரையில் மரிய ஜோசப்பின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அந்தமான் கடற்படை காவல்துறை உடனே அங்கு வந்து இறந்தவர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரேதப் பரிசோதனை முடிந்து அதன் பின்னர் இறந்த மரிய ஜோசப் உடல் தூத்துக்குடி வரும் எனக் கூறப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →