ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராதமாக இதுவரை ரூ.10.68 கோடி வசூல்!
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,94,681 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,94,681 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என பொதுமக்களுக்கு அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருந்த நிலையிலும், பல்வேறு பகுதிகளில் வெளியில் சுற்றுவோரை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர், அதிகாரிகள் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,94,681 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 5,53,431 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், 4,53,050 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை ரூ.10.68 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.