தமிழ்நாடு

தெலங்கானா காட்டும் வழியை பின்பற்ற வேண்டும்: அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

DIN

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் தெலங்கானா காட்டும் வழியை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலங்கானாவில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக  அறிவிக்க, மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் தெலங்கானா காட்டும் வழியை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திங்கள் இரவு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே #10thPublicExam இன்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக  அறிவிக்கும்போது, 33,229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா?

நாம் சொல்வதைக் கேட்காவிட்டாலும் @TelanganaCMO  காட்டும் வழியையாவது @CMOTamilNadu  பின்பற்ற வேண்டும்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களின் மக்கள்தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

பாகிஸ்தான் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 7 பேர் பலி!

கொளுத்தும் வெயிலா? பொழியும் மழையா? தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

ஓடிடியில் வெளியானது ஆவேஷம்!

சிகாகோவில் பயின்றுவந்த தெலங்கானா மாணவர் மாயம்

SCROLL FOR NEXT