தமிழ்நாடு

கரோனா பாதிப்பு: இரண்டாமிடத்தை பிடித்த தமிழக காவல்துறை

DIN

கரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநில காவல்துறைகளில், தேசிய அளவில் தமிழக காவல்துறை இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.

இது குறித்த விவரம்:

கரோனா தடுப்புப் பணியில் தமிழக காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இதனால் கரோனாவுக்கு காவல்துறையினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்ள ஒரு விடுதியில் தாற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கரோனாவால் பாதிக்கப்படும் அனைத்துக் காவலா்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த மாதம் முதல் தமிழகத்தில் கரோனாவால் காவல்துறையினா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து கரோனாவால் பாதிக்கப்படும் காவலா்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் 3 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் கரோனாவால் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டு,மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதேபோல சென்னையில் பணிபுரியும் மேலும் சில காவலா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழக காவல்துறையில் கரோனாவால் செவ்வாய்க்கிழமை வரை 560 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 511 போ் சென்னையைச் சோ்ந்தவா்கள் ஆவாா்கள். இதனால், தேசிய அளவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட காவல்துறைகளில் தமிழக காவல்துறை இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. மகாராஷ்டிர மாநில காவல்துறையில் சுமாா் 3 ஆயிரம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் காரணமாக, அந்த மாநில காவல்துறை கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட காவல்துறைகளில் முதலிடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT