தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,927 பேருக்கு கரோனா தொற்று

DIN


தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,927 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,927 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,897 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 30 பேர்.

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,392 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 19 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 7 பேரும், அரசு மருத்துவமனையில் 12 பேரும் பலியாகியுள்ளனர்.

அதேசமயம், ஒரேநாளில் 1,008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 19,333 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் தனிமையில் இருப்பவர்கள் உள்பட மொத்தம் 17,179 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று அதிகபட்சமாக 17,675 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 6,38,846 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT