தமிழ்நாடு

குன்னூரில் யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சம்

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை, கிளிஞ்சடா, போன்றப் பகுதிகளில் முகாமிட்டுள்ள குட்டியுடன் கூடிய யானைகள் அங்கிருந்த மேரக்காய் உள்ளிட்ட விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  

நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானைகள் அதிகளவில் சாலை மற்றும் கிராமப்புறங்களுக்கு வருவது கடந்த சில தினங்களாக அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்  இரவு நேரத்தில்   குன்னூர் அருகே தூதூர் மட்டம் பகுதியில் குட்டியுடன் யானைகள் சாலை ஓரத்தில் நிற்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி  ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு யானைகளை வனத்திற்குள் விரட்டினர். இவை தற்போது கிளிஞ்சடா பகுதியில் உள்ள மேரக்காய் பந்தல்களுக்கு உணவிற்காகக் குட்டியுடன் வந்து செல்வதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அசம்பாவிதங்கள் நடக்கும் முன் யானைகளை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT