தமிழ்நாடு

கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 48 மணி நேரத்துக்கு கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

அடுத்த 48 மணி நேரத்துக்கு கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு தென் மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 
சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லார் பகுதியில் 2 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. 
கேரளம், கர்நாடகம் கடலோர பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறவாளி காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT