தமிழ்நாடு

கரோனா பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.வின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர்

DIN

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனியின் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். 

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான கே.பழனி(57) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக நிவாரணப் பொருள்களை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து அவருக்கு உடல்சோர்வு ஏற்பட்ட நிலையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னை மணப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில், கே.பழனியின் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். உடல்நிலையை நன்றாக கவனித்துக்கொள்ளும்படி முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு கே.பழனி, தான் நலமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், எம்.எல்.ஏ. பழனிக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் (விடியோ)

ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? காவல்துறை விளக்கம்

இந்தோனேசியாவில் தோண்டத் தோண்ட கிடைக்கும் உடல்கள்..!

கருடன் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT