தமிழ்நாடு

மருத்துவப் படிப்பில் உள் இட ஒதுக்கீடு: அவசரச் சட்டம் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல்

DIN

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்வது குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இன்று தமிழக முதல்வரிடம் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தது. 

அதில், அரசுப் பள்ளி மாணவர்களின் பொருளாதார நிலை, வாழ்க்கைத் தரம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டம் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 10% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT