ஐந்தருவியில் நான்கு கிளைகளில் விழும் தண்ணீர். 
தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

DIN


தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குற்றாலத்தில் நிகழாண்டில் ஜூன் 1-ஆம் தேதிமுதல் வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான சாரல் மழையுடன் சீசன் அறிகுறி தென்படத் தொடங்கியது.

குற்றாலம் பகுதியில் பெய்த சாரல் மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கியது. ஆனால், தொடர்ந்து சாரல் மழை குறைந்ததால் அருவிகளில் நீர்வரத்தும் குறைந்தது.

குற்றாலம் பேரருவியில் பரவலாக விழும் தண்ணீர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மலைப் பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிரித்துள்ளது. பேரருவியில் பரவலாகவும், ஐந்தருவியில் நான்கு கிளைகளிலும், பழைய குற்றாலம் அருவியிலும் குறைந்த அளவிலும்  தண்ணீர் விழுகிறது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அருவிகளும்  பயணிகள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT