முகப்பு
தமிழ்நாடு

முழு ஊரடங்கு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

சென்னை உள்ளிட்ட முழு ஊரடங்கு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

சென்னை உள்ளிட்ட முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பகுதிகளில் ஜூன் 19 முதல் 30 ஆம் தேதி இரவு 12 மணி வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் சில குறிப்பிட்ட தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →