முகப்பு
தமிழ்நாடு

அச்சு-மின்னணு ஊடகங்கள்,நீதிமன்றங்கள் இயங்கத் தடையில்லை: தமிழக அரசு

முழு பொதுமுடக்க காலத்தில் அச்சு, மின்னணு ஊடகங்கள், நீதித் துறை மற்றும் நீதிமன்றங்கள் இயங்கத் தடையேதும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

சென்னை: முழு பொதுமுடக்க காலத்தில் அச்சு, மின்னணு ஊடகங்கள், நீதித் துறை மற்றும் நீதிமன்றங்கள் இயங்கத் தடையேதும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், அச்சு, மின்னணு ஊடகங்கள், நீதித் துறை மற்றும் நீதிமன்றங்கள் இயங்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

மேலும், வரும் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் எந்தத் தளா்வுகளும் இல்லாமல் முழு பொதுமுடக்கம் அமல் படுத்தப்படும் காலத்திலும் அச்சு, மின்னணு ஊடகங்கள் இயங்கத் தடையேதும் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசியப் பணிகளின் கீழ் ஊடகங்கள் வருவதால், அவை இயங்குவதில் எந்தத் தடையும் இல்லை என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →